டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கிங்க: நடிகர் சித்தார்த் கோபம்

ட்விட்டரை டாய்லெட் ஆக்கி வைத்திருப்பதாக நடிகர் சித்தார்த் கோபமாக தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சித்தார்த் பதிவு செய்து இருந்தார்

இந்த நிலையில் நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கூறிய முதல்வரை சித்தார்த் என்ன செய்யப் போகிறீர்கள் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்

இந்த கேள்விக்கு பதில் கூறிய சித்தார்த் ’மூதேவி கோவமோ, சந்தேகமோ வந்தா துப்பு இருந்தா போய் நீ கேளு, இல்ல உங்க அப்பனை போய் கேளு. நான் என் வேலைய தான் பாத்துட்டு இருக்குறேன். பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு, டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க.வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும், என்று பதில் சொல்லியுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது

https://twitter.com/Actor_Siddharth/status/1436993262095568899