shadow

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு,  மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

Leave a Reply