ராம்சரண் தேஜா, ஸ்ருதிஹாசன் , எமி ஜாக்சன் நடித்து வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் எவடு. இந்த திரைப்படத்தின் மொபைல் அப்ளிகேஷன் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார்.

மகேஷ்பாபு நடித்த ‘ஒன்’ என்ற திரைப்படத்திற்குத்தான் முதன்முதலில் மொபைல் அப்ளிகேஷன் என்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது அனைத்து படங்களுக்கும் மொபைல் அப்ளிகேஷன் வெளியிடும் முறை புதிதாக வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் உதவும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது திடீரென நடிகை ஸ்ருதிஹாசன் வயிற்றுவலியால் கீழே விழுந்ததால் விழாக்குழுவினர் பெரும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக அவர் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படார்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து கமல்ஹாசன் ஐதராபாத் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மருத்துவர்களிடம் நலம் விசாரித்தார். மும்பையில் இருந்து ஸ்ருதிஹாசனின் தாயார் டெலிபோன் மூலம் ஸ்ருதியின் நலனை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply