shadow

akshara and dhanush

தனுஷ் நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் அறிமுகம் ஆகிறார். தனுஷுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

அக்ஷரா ஹாசனுக்காக இந்த பாடலை பாடித்தரும்படி தனுஷ் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொண்டதாகவும், தனுஷுக்காகவே ஸ்ருதிஹாசன் பாடிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தி, தெலுங்கு, மற்றும் தமிழ் மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தங்கைக்காகவும், தனுஷுக்காகவும்  சென்னை வந்து இளையராஜா இசையில் பாடிவிட்டு சென்றுள்ளார்.

இளையராஜாவின் இசையில் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற “போற்றி பாடடி பெண்ணே” என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இளையராஜா இசையில் ஸ்ருதிஹாசன் தற்போதுதான் பாடுகிறார்.

Leave a Reply