சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் மான் கராத்தே படம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என இயக்குனர் திருக்குமரன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சென்ற வாரம் இந்த படத்திற்காக ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்தார் அனிருத். இந்த பாடலை யாரை பாட வைக்கலாம் என இயக்குனரும், அனிருத்தும் கலந்து ஆலோசித்தபோது அனிருத் ஸ்ருதிஹாசன் பெயரை பரிந்துரை செய்தார். ஸ்ருதிஹாசன் அனிருத்தின் முதல் படமான “3” படத்தில் “கண்ணழகா” என்று தொடங்கும் மிகப்பெரிய ஹிட் பாடலை பாடியவர் என்று குறிப்பிடத்தக்கது.

மான் கராத்தே படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் நேற்று முன் தினம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியபோது அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடிய அனுபவம் இருந்தாலும், இந்த பாடல் மிகவும் ஸ்பெஷலானது. ரசித்து பாடினேன் என்று தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இந்த படத்தின் பாடல் மார்ச் மாதம் வெளிவரவுள்ளது.

Leave a Reply