ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கிற்கு சென்ற ஸ்ருதிஹாசன் அங்கிருந்து இந்திக்கு சென்று விட்டார்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வரும் அவருக்கு இந்தியில் மூன்று படங்கள் கைவசம் உள்ளதாம். இந்த நிலையில், தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்து ஆர்யாவைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்கு ஸ்ருதியிடம் கால்சீட் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு கல்லெறிந்து பார்த்தாராம். கதையைக்கேட்ட ஸ்ருதிக்கு தனக்கான ரோல் வித்தியாசமாக தெரிய கைவசம் உள்ள படங்களை முடித்ததும் கால்சீட் தருவதாக கூறியிருக்கிறாராம்.

அதனால் ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் நடித்து வரும ஆர்யா அந்த படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Leave a Reply