ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தின் நியூ அப்டேட்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தயாரிப்பாளர்கள் திங்களன்று சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வர உள்ளது. வத்திக்குச்சி இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்கியிருக்கும் இப்படத்தில் டிரைவர் ஜமுனா, கேப் டிரைவராக நடிக்கிறார்.

இதில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக் குமார், ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், இசையமைப்பாளர் ஜிப்ரான், கலை இயக்குநர் டான் பாலா மற்றும் எடிட்டர் ஆர் ராமர் ஆகியோர் அடங்கிய வலுவான தொழில்நுட்பக் குழு இந்தப் படத்தில் உள்ளது.

டிரைவர் ஜமுனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.