நான் சர்வாதிகாரியாக மாறினால் என்னை சுட்டுக்கொல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர்

நான் சர்வாதிகாரியாக மாறினால் என்னை சுட்டுக்கொல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே பதவியேற்றது முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பில் அவர் காட்டிய அக்கறையை பிலிப்பைன்ஸ் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் ஒருசில நடவடிக்கைகளில் ரோட்ரிகா சர்வாதிகாரி போல நடந்து கொள்வதாகவும், தன்னுடைய பதவிக்காலத்தை 2020ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அவர் திட்டமிடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ரோட்ரிகா, ‘என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனை முன்னிறுத்தியே இருக்கும்,. எந்த விதத்திலாவது நான் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்ள முயற்சித்தால் என்னை தாராளமாக சுட்டுக்கொன்று விடுங்கள். இதை நான் விளையாட்டிற்காக சொல்லவில்லை’ என்று கூறினார். அதிபரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply