shadow

‘நாட்டை விட்டு வெளியே போ’ என இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்கர். அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்தியர்கள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறு என்று எச்சரித்துவிட்டு துப்பாக்கியால் மர்ம நபர் ஒருவர் சுட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அலோக் மாதசானி ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் என்ற பகுதியில் உள்ள பார் ஒன்றில் மதுவருந்தி கொண்டிருந்தபோது 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஆவேசமாக, துப்பாக்கியை எடுத்து இந்தியர்கள் நோக்கி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறு என்று கூறிக்கொண்டே சுட்டார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் துப்பாக்கியால் சுட்ட நபர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் அவருடைய பெயர் ஆடம் புரிண்டன் என்றும், மதுபோதையில் அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க போலீசார் ஆடம் புரிண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply