சில்க் ஸ்மிதா பெயரில் ஆதார் கார்டு. எப்படி சாத்தியம்?

சில்க் ஸ்மிதா பெயரில் ஆதார் கார்டு. எப்படி சாத்தியம்?

ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இனிமேல் எதுவுமே நடக்காது என்ற நிலை உள்ளது. ஆனால் ஆதார் கார்டில் உள்ள நம் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறதா? என்பதும், கண்ணின் கருவிழி மற்றும் கைரேகையுடன் வரும் ஆதார் கார்டிலும் போலி வருவதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் ஆதார் கார்டு விபரங்கள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சில்க் ஸ்மிதா கடைசியாக குடியிருந்த சென்னை தி.நகர் வீட்டு முகவரியில் அவரது இயற்பெய்ரான விஜய லட்சுமி ராமலு என்ற பெயருக்கே இந்த ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதாவின் கருவிழி மற்றும் கைரேகைகள் இல்லாமல் எப்படி ஆதார் கார்டு வழங்கப்பட்டது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Leave a Reply