டெல்லியில் கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஆம் ஆத்மி ஆட்சி ஆட்சியை பிடித்து அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வரானதை இந்திய நாடே அறியும். இந்நிலையில் நடிகர் விஷால் ஆம் ஆத்மி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது என அதிர்ச்சி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

நேற்றைய புத்தாண்டு தினத்தில் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு வேகமாக பரவி வந்தது. அது ஆம் ஆத்மி கட்சியில் தமிழக தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதுதான். இதுகுறித்து விஷாலிடம் கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் விஷால் அதிர்ச்சியுடன் “எனக்கு அரசியல் ஈடுபாடே கிடையாது. ஆம் ஆத்மி என்பது ஒரு கட்சியின் பெயர் என்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது. இது வேண்டுமென்றே யாரோ கிளப்பிய வதந்தி. என்னுடைய படத்தில் அரசியல் நுழைவதையே நான் அனுமதிக்க மாட்டேன். நானாவது ஒரு கட்சியின் தலைவராக இருப்பதாவது, என பதிலளித்துள்ளார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு நடிகைகள் சமந்தா, தமன்னா, மற்றும் அனுஷ்கா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது இங்குள்ள தமிழக அரசியல்வாதிகளை வெறுப்பூட்டியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply