shadow

shilpashetty-98பிரபல பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, இன்று ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்றார். அங்கு  நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இறந்த பிறகு எனது கண்களால் எனக்கு பயன் இல்லை. ஆகையால் எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்களால் மற்றவர்களுக்கு பார்வை கிடைக்கும் என்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் ராஜஸ்தான் ராயல் அணியின் தோல்வியை மறக்க விரும்புவதாகவும், அதைபற்றி யாரும் ஞாபகப்படுத்தவேண்டாம் என்றும் நிருபர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிதாக பதவியேற்ற மத்திய அரசு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் “நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள பா.ஜனதா அரசு பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

முன்னதாக ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்னர். அவர்களுடன் ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டியும் சென்றிருந்தனர்.

Leave a Reply