மோடியை எதிர்க்கும் இன்னொரு பாஜக பிரமுகர்
பிரதமர் மோடியை சமீபத்தில் முன்னாள் நிதியமைச்சரும், பாஜக பிரமுகருமான யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போது பாஜக எம்பியும், பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹா மோடியை விமர்சனம் செய்துள்ளார்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மோடி குறித்து சத்ருகன்சின்ஹா தனது டுவிட்டரில் கூறியதாவது: மரியாதைக்குரிய ஐயா! தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நம்ப முடியாத கதைகளை, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தினமும் அவிழ்த்துவிட வேண்டுமா? இப்போது, பாகிஸ்தான் தூதர் மற்றும் ராணுவ ஜெனரல்களுடன் அவர்களை இணைத்து பேச வேண்டுமா? என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் இன்னொரு டுவீட்டில், ‘ஐயா! புது புது ட்விஸ்டுகள், கதைகளை தவிர்த்துவிட்டு, நாம் சொன்ன வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம். வீட்டு வசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஆரோக்கியம், குஜராத் வளர்ச்சி மாடல் ஆகியவை குறித்து பேசலாம். மதவாத சூழ்நிலையை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான அரசியலுக்கும், ஆரோக்கியமான தேர்தலுக்கும் செல்லலாம்’ என்று அவர் கூறியுள்ளார். மோடியின் பேச்சுக்கு அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.