ஷர்துல் தாக்கூர் திருமணம் செய்ய போகும் பெண் யார் தெரியுமா?

சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஷர்துல் தாக்கூருக்கும் மிட்டாலி பருல்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இருதரப்பு பெற்றோரின் சம்மதத்தின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது

அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது