shadow

61 ஆயிரத்திற்குள் மீண்டும் சென்செக்ஸ்: மீளுமா பங்குச்சந்தை?

பங்குச்சந்தை சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது.

இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்துள்ளது. எனவே சென்செக்ஸ் 60,885 என வர்த்தகமாகி வருகிறது. எனவே மீண்டும் 61 ஆயிரத்துக்குள் சென்செக்ஸ் வந்துள்ளது

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. எனவே நிப்டி 18 ஆயிரத்து 150 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.