பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதோகதி: அதிர்ச்சி தகவல்

இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 460 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது

கடந்த வாரமே சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்றும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அதோகதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய பங்கு சந்தை முடிவில் 1546 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து 54472 என வர்த்தகம் முடிவுக்கு வந்தது.

தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளி 468 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து 17 ஆயிரத்து 149 என்ற நிலையிலும் வர்த்தக முடிவடைந்தது