shadow

இன்று வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் 1245 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்ட நிலையில் இன்று சென்செக்ஸ் 1245 புள்ளிகள் சரிந்து 55791 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது

அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 372 புள்ளிகள் சரிந்து 16613 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது

கடந்த சில நாட்களில் சென்செக்ஸ் சுமார் 7000 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.