shadow

முதன்முதலாக ஷங்கருடன் இணைந்த சிவகார்த்திகேயன்

shankarகோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடல் நாளை அதாவது ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நாளை வெளியிடுகிறார்.

ஷங்கர் தற்போது தான் இயக்கி வரும் ‘2.0’ படத்தின் பணியில் பிசியாக இருந்தபோதிலும் சிவகார்த்திகேயனுக்காக நேரம் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ‘செஞ்சிட்டாளே’ சிங்கிள் பாடல் வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் SIIMA விருது வழங்கும் விழாவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வரும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

Leave a Reply