அஜீத்-ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,
ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் பிரமாண்ட இயக்குனரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தொடர்ச்சியை எடுக்கப்போவதாக எந்திரன் ரிலீஸ் சமயமே ஷங்கர் கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்க ரஜினியுடன் ஷங்கர் ஆலோசனை செய்தார். ஆனால் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமானால் அதிகப்படியான ரிஸ்க் எடுக்க வேண்டும், அதற்கு தனது உடல்நிலை ஒத்துவராது என்றும் கூறி ரஜினி நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் கேரக்டரில் நடிக்க வேறு நடிகரை ஷங்கர் ஆய்வு செய்தபோது அவருடைய மனதிற்கு வந்த ஒரே நடிகர் அஜீத் ஒருவர் மட்டுமே..ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்து மாபெரும் வெற்றி பெற்றதுடன் அதன் இரண்டாம் பாகத்திலும் அஜீத் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதில் அஜீத்தை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துவிட்டார்.
அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் ஷங்கர் “ஐ” படத்தின் டெக்னிக்கல் வேலைகளை முடித்துவிடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து எந்திரன் படத்தின் 2ஆம் பாகத்தை தொடங்க உள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் சிலநாட்களில் வெளிவரும்