நாயகியாகும் ஷங்கர் மகள்: ஹீரோ, தயாரிப்பாளர் இந்த நட்சத்திரங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் அறிமுகமாகிறார்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.