shadow

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி ஒரு தெலுங்கு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை மட்டும் ரூபாய் 350 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றி உள்ளது.

ராம்சரண் தேஜா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.