‘தர்பார்’ படம் பார்த்த அஜித் மனைவி: ரசிகர்கள் வரவேற்பு
கடந்த ஆண்டு இதே பொங்கல் நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தை அஜித் ரசிகர்களும் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருவதால் இருதரப்பினர்களும் சமாதானம் அடைந்து விட்டார்கள் என தெரிகிறது
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற திரையரங்கில் அஜித்தின் மனைவி ஷாலினிஅஜித் ‘தர்பார்’ படம் பார்க்க வந்திருந்தார். அவரை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். தர்பார் படம் நன்றாக இருந்ததாக அஜித்தின் மனைவி கூறியதை அடுத்து அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் தற்போது படத்தை கொண்டாடி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.