மருத்துவர்களுக்காக 4 மாடி ஓட்டல்: இலவசமாக கொடுத்த நடிகர் ஷாருக்கான்

கொரோனா வைரஸுக்கு எதிராக இரவு பகலாகப் பாடுபடும் மருத்துவர்களுக்கு பல்வேறு மரியாதைகள் கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே

சமீபத்தில் தனது தாஜ் ஹோட்டலை மருத்துவர்கள் தங்குவதற்காக ரத்தன் டாடா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஷாருக்கான் தனது நான்கு மாடி ஓட்டலை மருத்துவர்கள் ஓய்வெடுக்கவும், தங்கி கொள்ளும் இடமாக பயன்படுத்தி கொள்ளவும் அனுமதித்துள்ளார்

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் ஏராளமானோர் அவரது ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகின்றனர் மருத்துவர்கள் கொரொனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மக்களுக்காக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு தனது நான்கு மாடி ஹோட்டல் கொடுத்த ஷாருக்கானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply