7 வருட சட்டப்போராட்டம் வெற்றி! தூக்கிலிட்ட பின் கைதட்டிய நிர்பயா தாயார்

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வருக்கும் சற்றுமுன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஏழு வருடங்களாக போராடிய நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி அவர்களுக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி அறிந்ததும் நிர்ப்யாவின் தாயார் கைதட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் திஹார் சிறைமுன் குவிந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கைதட்டி தங்களது சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தனது அன்பு மகளை பலி கொடுத்த ஆஷா தேவி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நீதிமன்றத்தில் ஆவேசமாக வாதாடினார். குறிப்பாக மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் நிர்பயா கொடுத்த வாக்குமூலம் முதல் கடைசி நேரத்தில் நிர்பயா பட்ட கஷ்டங்கள் வரை நீதிமன்றத்தில் ஆஷா தேவி வாதாடியதே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணங்கள் ஆகும்

Leave a Reply