shadow

இந்த வாரம் ஏழு படங்கள் ரிலீஸ். ஒரு பார்வை

ruthraஇந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் வெளியாவது தமிழில்தான் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வரும் வெள்ளியன்று மொத்தம் ஏழு படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா நடித்த சரித்திர உண்மைச்சம்பவ திரைப்படமான ‘ருத்ரம்மாதேவி, இலங்கை அகதிகள் குறித்த படமான ‘சிவப்பு’, கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள மய்யம், மன்சூரலிகான் இயக்கி நடித்துள்ள ‘அதிரடி’, மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் ‘விரைவில்இசை’, இவ்வாண்டுத் தொடக்கத்திலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்ட ‘திரைப்படநகரம்’ மற்றும் புதுமுகங்கள் நடித்திருக்கிற திகில்படம் ‘மரப்பாச்சி’ ஆகிய ஏழுபடங்கள் வெளியாகவிருக்கின்றன.

கடந்த வெள்ளியன்று ‘கத்துக்குட்டி’, ‘மசாலா படம்’ ஆகிய இரண்டே படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தவாரம் ஏழு படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply