சித்தூர்: திருப்பதி யில் இருந்து புறப்பட்ட சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலை நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து பெங்களூர் செல்லும் சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 5 நிமிடத்தில் பெனுமூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென இரண்டு பெட்டிகளில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். மேலும் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தினர். இதனைதொடர்ந்து தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.பின்னர் ரயில் சித்தூர் ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு சம்பந்தபட்ட பெட்டியில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். புகை வந்த ரயில் பெட்டிகளை சோதனை செய்த ரயில்வே ஊழியர்கள் பிரேக்ஷு தேய்ந்ததால் புகை வந்ததாக தெரிவித்தனர்.பின்னர் புகை வந்த எஸ் 7, எஸ் 8 பெட்டிகளில் பழுது சரிசெய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 20 நிமிடம் தாமதமாக 6.45 மணிக்கு சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றது.புகை வந்ததை பயணிகள் உடனடியாக பார்த்து ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டன. இல்லையெனில் ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply