shadow

சென்னை மெரினாவில் போராட்டத்தை தடுக்க போலீசாரின் புதிய திட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இன்னுமொரு மெரீனா போராட்டம் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மெரீனாவில் போராட்டம் செய்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

எனவே சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க தற்போது சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டுள்ளன சர்வீஸ் சாலைகளில் வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply