தொடரை இழந்தும் கெத்தாக முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இந்த வெற்றியை அடுத்து நியூசிலாந்து அணி 2 0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

டி20 கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் ஆன நியூசிலாந்து அணி அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியாவை வாஷ் அவுட் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 120 புள்ளிகள் எடுத்து டெஸ்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 116 புள்ளிகளாக குறைந்துள்ளது. அதேபோல் 105 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது 110 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்றதால் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply