சகோதரியை வீழ்த்தியதால் நம்பர் ஒன் இடத்தை பெற்ற செரீனா

சகோதரியை வீழ்த்தியதால் நம்பர் ஒன் இடத்தை பெற்ற செரீனா

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் நம்பர் ஒன் இடத்தை அவர் பிடித்துள்ளார்

தரவரிசையில் முதல் பத்து இடங்களை பிடித்த வீராங்கனைகள் பெயர்கள் பின்வருமாறு:

1. செரீனா வில்லியம்ஸ் (7,780 புள்ளிகள்)
2. ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (7,715)
3. செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா (5,270)
4. ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,073)
5. சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா (4,985)
6. போலந்து வீராங்கனை அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (4,915)
7. ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (4,720)
8. ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா (3,915)
9. அமெரிக்க வீராங்கனை கெய் மேடிசன் (3,897)
10. இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (3,705)

இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 17-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published.