செங்கல்பட்டு அருகே விபத்து பலி 2 படுகாயம் 24
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காலை திருச்சிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ் செங்கல்பட்டு அருகே பரனூர் பாலத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது திருவண்ணாமலை செல்லும் பஸ் பின்னால் வந்து திருச்சி பஸ் மீது மோதியது இதில் பஸ் நகர்ந்தது அப்போது வெளியில் நின்று இருந்த திருச்சி பஸ் டிரைவர் சீனிவாசன் கண்டக்டர் இருதயராஜ் ஆகியோர் இந்த பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். மேலும் பயணிகள் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply