அடுத்த ஆண்டு தான் செமஸ்டர் தேர்வு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த ஆண்டு தான் செமஸ்டர் தேர்வு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டிய நிலையில் கொரோனா விவகாரம் காரணமாக தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டின் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸின்‌ தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில்‌ ஒன்றாக அனைத்துக்‌ கல்லூரிகளுக்கும்‌ 17.03.2020 முதல்‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்‌ விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர்‌ தேர்வுகள்‌ இன்னும்‌ நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள்‌ தமிழ்நாட்டைத்‌ தவிர வேறு மாநிலங்களிலிருந்தும்‌ அயல்‌ நாட்டிலிருந்தும்‌ வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்‌. இதனை கருத்தில்‌ கொண்டு அனைத்து செமஸ்டர்‌ தேர்வுகளும்‌ மீண்டும்‌ கல்லூரிகள்‌ துவங்கும்‌ அடுத்த பருவம்‌ செமஸ்டரின்‌ துவக்கத்தில்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌. கல்லூரி மற்றும்‌ பல்கலைக்கழகங்கள்‌ மீண்டும்‌ திறப்பதற்கான தேதி அரசால்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.