மனைவியை விவாகரத்து செய்கிறாரா இயக்குனர் செல்வராகவன்?

இயக்குனர் செல்வராகவன் தனது முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவது மனைவி கீதாஞ்சலியையும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு காரணம் செல்வராகவனின் டுவிட் தான். அதில் ’இன்னொருவர் இருந்தால் தான் நிம்மதி என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதை போல் ஒரு உன் இம்சை எதுவுமில்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி’ என்று பதிவு செய்துள்ளார்

இதுகுறித்து செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு கேவலமான வதந்தி. அவர் ஒரு எதார்த்தமாக டுவிட்டை பதிவு செய்தார். எல்லாருக்குமே ஒரு பொது ஸ்பேஸ் தேவை என்பதுதான் அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு கை கால் முளைத்து கதை கட்டிவிடுவது மோசமான ஒன்று. நாங்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.