அண்ணாமலைக்கு ஆசைப்பட அனைத்து உரிமைகளும் உள்ளது: செல்லூர் ராஜூ

2026 ஆம் ஆண்டு பாஜக 150 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறிய நிலையில் அண்ணாமலை அவருடைய ஆசையை கூறியுள்ளார் என்றும் அவரது ஆசையை கூறுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அடுத்த தேர்தல் மிகவும் கண்ணியமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்