இதைப் போய் பெருசு பண்றீங்களே:

விஜய் சேதுபதி குறித்து சீனு ராமசாமி

கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

கடவுள் குளிப்பது குறித்தும் டிரஸ் மாற்றுவது குறித்தும் அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் விஜய்சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்

இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனரும், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும்
சொல்லியிருக்கிறார்கள்,. இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். விரைவில் மாமனிதன் திரைப்படம் வெளியாகும், அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply