shadow

நாங்க போராடி கொண்டிருக்கின்றோம், ரஜினி விளையாடி கொண்டிருக்கிறார். சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் உடல்பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா சென்றார். உடல்பரிசோதனை நேரம் போக மீதி நேரத்தில் அவர் நண்பர்களுடன் ஆலோசனை, தியானம், ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கேசினோ கிளப் ஒன்றில் சூதாட்டம் ஆடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கருத்து கூறிய நாம் தமிழர் சீமான், தமிழகத்தில் மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், ஆனால் ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார். இதை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.

இதே பிரச்சனை குறித்து சுப்பிரமணியம் சுவாமி பேசியபோது, ‘கேசினோ விளையாடி ரஜினி தன்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கிறார். அவருக்கு அமெரிக்க டாலர்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply