சீமானுக்கு எனது கொள்கை தெரியாது: கமல்ஹாசன்

சீமானுக்கு எனது கொள்கை தெரியாது: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள நிலையில் அவரை பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு சீமான் வருகை தந்தார். புதிய கட்சி தொடங்கவிருக்கும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான், *தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து கமல் கூறியபோது, ‘சீமானுக்கு எனது கொள்கைகள் என்னவென்று தெரியாது. நாளை நான் அறிவிக்கவிருக்கும் கொள்கைகள் சீமானுக்கு உடன்பாடு என்றால் அவர் என்னுடன் இணைந்து பணிபுரிவார். அவருக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். கமல், சீமான் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply