14அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் மட்டும் அல்ல; இந்திய மக்களுக்கு விடுதலையை பெற்று தருகின்ற முக்கியமான தேர்தல் என்று சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த தனது 2 வது நாள் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள், பொருளாதார சீரழிவு, ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக நடைபெறுகிற தேர்தல். உங்கள் துன்பங்களை போக்குகின்ற தேர்தல். உங்களை துயரங்களில் இருந்து விடுவிக்கின்ற  தேர்தல்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசினால் என்னென்ன பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகி இருக்கின்றார்கள் என்பதை சொல்லி மாளாது. பெட்ரோல் டீசல் விலை, தொழில் வளர்ச்சியின்மை என காங்கிரஸ் ஆட்சியில் ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை சொல்வதற்கு ஒரு நாள் போதாது.

பாதுகாப்பு துறையை உள்படஅனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுபோன்ற கோரமான அரசை மக்கள் ஒருபோதும் பார்த்ததே இல்லை.

2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ, அதைவிட மகத்தான வெற்றியை பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்களிடம் வைக்கவே இங்கே வந்திருக்கிறேன்.

Leave a Reply