எல்ஐசி ஐபிஓவில் இருந்து 60 ஆயிரம் கோடியை திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எல்ஐசி பங்குகள் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்கு சமீபத்தில் செபி அனுமதி அளித்துள்ளது

இதனை அடுத்து எல்ஐசியின் பங்குகள் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

எல்.ஐ.சி ஐபிஓ மூலம் மத்திய அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருப்பதாகவும் பட்ஜெட் பற்றாக்குறை உள்ள நேரத்தில் இந்த பணம் மிகப்பெரிய அளவில் உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் எல்ஐசி ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது