உ.பியில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து. 15 பெட்டிகள் தடம்புரண்டது

உ.பியில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து. 15 பெட்டிகள் தடம்புரண்டது

உத்தரபிரதேச மாநிலத்தில் சீல்டா – அஜ்மீர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் 15 பெட்டிகள் கான்பூர் அருகே தடம்புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கான்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள, ரூரா என்றபகுதியில் சென்று கொண்டிருந்த ரயில் எண் 12988 சீல்டா – அஜ்மீர் விரைவு ரயில் இன்று அதிகாலை சிறிய பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென ரயிலின் 15 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த  விபத்து குறித்து முழு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்த ரயில் விபத்து குறித்து அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.