நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நவம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது அதனை உறுதி செய்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முன் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.