கடும் வெயில் எதிரொலி: பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்: செங்கோட்டையன்

கடும் வெயில் எதிரொலி: பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்: செங்கோட்டையன்

கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்த வருடம் மிக அதிகமாக தமிழகத்தில் வெயில் அடித்து வருகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே கொளுத்திய வெயில், அக்னி ஆரம்பமான பின்னர் மிக அதிகமாக வாட்டி எடுத்தது

இந்த நிலையில் கடுமையான வெயில் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது. இதை பரிவுடன் பரிசீலித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு முன்னர் ஜூன்1ஆம் தேதியே பள்ளிகள் திறப்பதாக இருந்தது.

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை அடுத்து தனியார் பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.