9 10 11 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை என்று வெளியாகிக் கொண்டிருக்கும் வதந்தியை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

கடந்த ஜனவரி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பாட வகுப்புகள் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியபோது ஏப்ரல் 1 முதல் விடுமுறை அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் எனவே இது குறித்த செய்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *