நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

students

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மழை காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது