பாத்ரூமில் பாட்டு கேட்ட 12 வயது பள்ளி மாணவி மரணம்

பாத்ரூமில் பாட்டு கேட்ட 12 வயது பள்ளி மாணவி மரணம்

ரஷ்யாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாத்ரூமில் மொபைல் போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாட்டு கேட்டு கொண்டிருந்தவர் திடீரென மின்சார ஷாக் அடித்து பரிதாபமாக பலியானார்

ரஷ்யாவை சேர்ந்த 12 வயது பள்ளி மானவி கெசென்யா. இவர் சம்பவ தினத்தன்று பாத்ரூமில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார். அப்போது மொபைல் போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டதால் பாத்ரூம் ப்ளக்கில் சார்ஜ் ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபைல்போன் நழுவி கீழே உள்ள தண்ணீரில் விழுந்துவிட்டது.

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தபோதே தண்ணீரில் இருந்து மொபைலில் எடுக்க அவர் முயற்சித்தபோது மின்சார ஷாக் அடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply