பள்ளி விடுமுறை அறிவிப்பு திடீர் நிறுத்திவைப்பு: பரபரப்பு தகவல்

பள்ளி விடுமுறை அறிவிப்பு திடீர் நிறுத்திவைப்பு: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ம் ஆம் தேதி வரை விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply