பள்ளிக்கட்டணம் கட்டாததால் மாணவிகளை பூட்டி வைத்த பள்ளி நிர்வாகம்: அதிர்ச்சி தகவல்

பள்ளிக்கட்டணம் கட்டாததால் மாணவிகளை பூட்டி வைத்த பள்ளி நிர்வாகம்: அதிர்ச்சி தகவல்

பள்ளி கட்டணம் கட்டாததால் 35 மாணவிகளை அறையில் பூட்டி வைத்த பள்ளி நிர்வாகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 35 மாணவிகள் பள்ளி கட்டணம் கட்டவில்லை என தெரிகிறது

இதனை அடுத்து அந்த மாணவிகளை தனியாக ஒரு வகுப்பறையில் பள்ளி நிர்வாகம் பூட்டி வைத்ததாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் விரைந்து வந்து பூட்டி வைத்திருந்த பூட்டை உடைத்து மாணவிகளை மீட்டுச் சென்றனர்

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது