மாணவிகள் போராட்டம் எதிரொலி: சென்னை பள்ளி தாளாளர் கைது

மாணவிகள் போராட்டம் எதிரொலி: சென்னை பள்ளி தாளாளர் கைது

சென்னைத திருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வினோத் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை கைது செய்ய வேண்டும் என மாணவ மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதால் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

12ஆம்வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வினோத் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.