கர்ணன் சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சுப்ரீம் கோர்ட்

கர்ணன் சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சுப்ரீம் கோர்ட்

ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தமிழக மற்றும் கொல்கத்தா போலீசார் நேற்று கோவையில் கைது செய்த நிலையில் இன்று அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இன்று கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் விடுமுறை காலம் முடிந்து நீதிமன்றம் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் சிறப்பு அமர்வே இது குறித்து முடிவு செய்யும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதனால் நீதிமன்ற விடுமுறை காலம் முடிந்து அதன் பின்னர் கர்ணனின் ஜாமீன் மனு விசாரிக்கப்படும் வரை அவர் காவலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply