இன்றே லோக் ஆயுக்தா வேலையை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இன்றே லோக் ஆயுக்தா வேலையை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த ஒரு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரனைக்கு வந்தது. அதில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன்வைக்கும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது.

‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply