குடும்பத்துடன் வாழ்ந்தால் வரி கட்ட வேண்டும்! இந்தியர்களுக்கு செக் வைத்த சவுதி அரேபியா

குடும்பத்துடன் வாழ்ந்தால் வரி கட்ட வேண்டும்! இந்தியர்களுக்கு செக் வைத்த சவுதி அரேபியா

சவுதிஅரேபியா செல்வச்செழிப்புள்ள நாடு என்பதால் அந்நாட்டில் வரி என்பதே இல்லை. ஆனால் சிகரெட் போன்ற போதை பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வரிவிதிக்கும் வகையில் புதிய வரிக்கொள்கை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடும்ப வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பால் சவுதியில் வாழும் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் சவுதியில் குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனராம்.

வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் (1,700 ரூபாய்) வரியாக வசூலிக்கப்படும். அதுமட்டுமன்றி 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply